Poonguil |
---|
பூங்குயில் பொன் மாலையில்
பாடுதே பாடல்
வீணையே உன் போலவே
எனக்குமா காவல்
இருவரும் பெண் அல்லவோ
யாரிடம் சொல்லவோ
இருவரும் பெண் அல்லவோ
யாரிடம் சொல்லவோ
பூங்குயில் பொன் மாலையில்
பாடுதே பாடல்
தனித்த இடங்களில் நீ வாழ்வதேன்
நினைத்த வழிகளில் நீ போவதேன்
துடிக்கும் இளமையும் பொல்லாததோ
தவிக்கும் தவிப்பினை சொல்லாததோ
பிறக்கலாம் இனிக்கும் எதிர்காலம்
கிழக்குகள் வெளுக்கும் எந்நாளும்
பறக்கலாம் பறவை எங்கேயும்
படிக்கலாம் கவிதை எப்போதும்
இளமை இனிமை
இரண்டும் கலந்த புதுமை
இதுதான் இதுதான்
இனியும் எதற்கு தனிமை
ராகம் இளைய தாளம்
இணைய மோக நினைவிலே
இதயக் கடலில் அலைகளும் எழ
இனியது இசையது பெருகிட
பூங்குயில் பொன் மாலையில்
பாடுதே பாடல்
வீணையே உன் போலவே
எனக்குமா காவல்
இருவரும் பெண் அல்லவோ
யாரிடம் சொல்லவோ
கொதிக்கும் எரிமலை ஆறாததோ
குளிர்ந்த நிலம் என மாறாததோ
ஒதுங்கி இருப்பதில் சந்தோஷமோ
ஒருத்தி நெருங்கிட சந்தேகமோ
வசந்தமும் வரலாம் நினைத்தாலே
நினைத்ததை பெறலாம் மனத்தாலே
நிலவினில் களங்கம் இருந்தாலும்
ஒளியினை வழங்கும் எந்நாளும்
ஒரு நாள் திருநாள்
விரைவில் அரும்பி வரலாம்
நினைக்கும் சுகங்கள்
அனைத்தும் உனக்கு தரலாம்
நாத மழையில் கீத மழையில்
நீந்தும் பொழுதிலே
இனியும் கனவில் இள மனம் விழ
விடியுது இசையது பொழிந்திட
பூங்குயில் பொன் மாலையில்
பாடுதே பாடல்
வீணையே உன் போலவே
எனக்குமா காவல்
இருவரும் பெண் அல்லவோ
யாரிடம் சொல்லவோ
இருவரும் பெண் அல்லவோ
யாரிடம் சொல்லவோ
பூங்குயில் பொன் மாலையில்
பாடுதே பாடல்
வீணையே உன் போலவே
எனக்குமா காவல்
Poonguyil Pon Maalaiyil
Paadudhae Paadal
Veenaiyae Un Polavae
Enakkumaa Kaaval
Iruvarum Penn Allavo
Yaaridam Sollavo
Iruvarum Penn Allavo
Yaaridam Sollavo
Poonguyil Pon Maalaiyil
Paadudhae Paadal
Thanitha Idangalil Nee Vaazhvadhen
Ninaitha Vazhigalil Nee Povadhen
Thudikkum Ilamaiyum Pollaadhadho
Thavikkum Thavippinai Sollaadhadho
Pirakkalaam Inikkum Edhirkaalam
Kizhakkugal Velukkum Ennaalum
Parakkalaam Paravai Engaeyum
Padikkalaam Kavidhai Eppodhum
Ilamai Inimai
Irandum Kalandha Pudhumai
Idhu Thaan Idhu Thaan
Iniyum Edharkku Thanimai
Raagam Ilaiya Thaalam Inaiya
Moga Ninaivilae
Idhaya Kadalil Alaigalum Ezha
Iniyadhu Isai Adhu Perugida
Poonguyil Pon Maalaiyil
Paadudhae Paadal
Veenaiyae Un Polavae
Enakkumaa Kaaval
Iruvarum Penn Allavo
Yaaridam Sollavo
Kodhikkum Erimalai Aaraadhadho
Kulirndha Nilam Yena Maaraadhadho
Odhungi Iruppadhil Sandhoshamoo
Oruthi Nerungida Sandhaegamoo
Vasanthamum Varalaam Ninaithaalae
Ninaithadhai Peralaam Manathaalae
Nilavinil Kalangam Irundhaalum
Oliyinai Vazhangum Ennaalum
Oru Naal Thiru Naal
Viraivil Arumbi Varalaam
Ninaikkum Sugangal
Anaithum Unakku Tharalaam
Naadha Mazhaiyil Geetha Mazhaiyil
Neendhum Pozhudhilae
Iniyum Kanavil Ila Manam Vizha
Vizhiyadhu Isaiyadhu Pozhindhida
Poonguyil Pon Maalaiyil
Paadudhae Paadal
Veenaiyae Un Polavae
Enakkumaa Kaaval
Iruvarum Penn Allavo
Yaaridam Sollavo
Iruvarum Penn Allavo
Yaaridam Sollavo
Poonguyil Pon Maalaiyil
Paadudhae Paadal
Veenaiyae Un Polavae
Enakkumaa Kaaval