Aayiram Kannudaiyal

Aayiram Kannudaiyal Song Lyrics In English

தாயே

ஆயிரம் கண்ணுடையாள்ஆஆஆ ஆயிரம் கண்ணுடையாள் ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

ஆயிரம் கண்ணுடையாள் ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மூகாம்பிகே மூகாம்பிகே என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மூகாம்பிகே ஈசன் மேனி பாகம் கொண்ட ஜகதாம்பிகே அந்நாளில் மூடனையும் பாட வைத்தவள் எந்நாளும் ஊமைகளை பேச வைப்பவள்

ஆயிரமாம் திருநாமம் உனதாகுமே அம்மா என்றழைத்தாலும் அது போதுமே

மொழியே தருபவளே ஒளி வடிவாய் திகழ்பவளே உனையே துதித்திடவே ஓங்காரம் தந்தவளே

ஆயிரம் கண்ணுடையாள் ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

தாயே உமையாளே எமையாளும் அபிராமி தாயே உமையாளே எமையாளும் அபிராமி நாளும் தொழுவாரின் துயர் நீக்கும் சிவகாமி யாவும் புவி மீதில் அழகாக படைத்தாயே யாரும் அதைக் காண இரு விழிகள் கொடுத்தாயே

கண்ணற்ற பேரும் உன் கோயில் வந்தால் கண் பெற்று போவார் எல்லாமே காண்பார் ஒளியே தருபவளே முழு நிலவாய் திகழ்பவளே இருளும் விலகியதே அருள் முழுதும் பெருகிடவே

ஆயிரம் கண்ணுடையாள் ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

தீயினிலே நீ பிறந்தாய் தென்குமரி தெய்வமம்மா தீமைகளை சுட்டெரித்து காவல் கொண்ட கன்னியம்மா எழுந்து நடக்காமல் எடுத்த அடி வைக்காமல் இடறி விழும் முடவனுக்கு நடை கொடுக்கும் காளியம்மா

ஆயிரம் கண்ணுடையாள் ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

பரமேஸ்வரி ஜெகதீஸ்வரி சர்வேஸ்வரி அமுதேஸ்வரி ராஜேஸ்வரி நாவேஸ்வரிநாகேஸ்வரி