Ambalathu Nadaraja Un |
---|
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா!
பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க நானாக நிற்பதென்ன நடராஜா

பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது பாலும் முறிந்ததென்ன நடராஜா
பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது தீபம் அணைந்ததென்ன நடராஜா
பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து உயிரைப் பறித்ததென்ன நடராஜா
தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா