Ammamma Thambi Endru Nambi

Ammamma Thambi Endru Nambi Song Lyrics In English


அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்

அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்

மலை போல வளமான
மனம் வேண்டும் உனக்கு
செய் நன்றி மறக்காத
குணம் வேண்டும் உனக்கு

தெய்வங்கள் உண்டென்று
நம்பிக்கை கொண்டு
சேவைகள் செய்தால்
உன் தேசம் செழிக்கும்
நீ பிறருக்காக வாழ்வது
இன்பம் அல்லவோ


பல கோடி உள்ளங்கள்
வாழ்கின்ற நாடு
பதினாலு மொழி பேசும்
அழகான வீடு

இன சண்டை மொழி சண்டை
கூடாது இங்கு
எல்லோரும் ஒரு தாயின்
மக்கள் அல்லவோ
நாம் எல்லோரும் இந்நாட்டு
மன்னர் அல்லவோ

அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்

அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்