Elangaathu Veesudhey Solo

Elangaathu Veesudhey Solo Song Lyrics In English


இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல


இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே