En Kelvikkenna

En Kelvikkenna Song Lyrics In English


என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி



பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே

சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே

வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை

என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி

புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே

அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே

விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்

ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்

என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி



அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ

பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ

அலை போலே
குழலசைய

சிலை போலே
நடை பயில

வலை ஓசை
இசை கொடுக்க

வருவேனே
இணைந்திருக்க

என் கேள்விக்கென்ன பதில்

என் கேள்விக்கென்ன பதில்

உன் பார்வைக்கென்ன பொருள்

மணமாலை
கொண்டு வரும்

ஆண் & திருநாளும்
என்று வரும்