Enthan Vaazhkaiyin

Enthan Vaazhkaiyin Song Lyrics In English


எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்து விட்டு
உயிரில் கலந்தாய் என் உயிரே

உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையேஏ

எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்து விட்டு
உயிரில் கலந்தாய் என் உயிரே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்கச் சிலையே

தாயின் மடி சேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்து விட்டு
உயிரில் கலந்தாய் என் உயிரே

உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையேஏ


எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே

காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்து விட்டு
உயிரில் கலந்தாய் என் உயிரே

உன் பூ விழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையேஏ

எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்து விட்டு
உயிரில் கலந்தாய் என் உயிரே