இதமாய் இதமாய் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijay Antony, Ashima Narwal | ||
Movie | Kolaigaran | ||
Music By | Simon K. King | ||
Lyric By | Dhamayanthi | ||
Singers | Keerthana Vaidyanathan | ||
Year | 2019 |
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா
இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா
இதமாய் நெளியும் விரலில் கதை படிப்பாயா
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா
மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா
உயிர்த்துளி நெருப்பென
இடை வழி படருதே
குடை என விரிந்து சேராயோ
ஒரு நொடி உறங்கிடா
இரவுகள் புதியதே
விடிந்திட தடைகள் சொல்லாயோ
சில்லிடும் உடலினில்
பிரதி எடுதாயோ
என் மனம் உடைகள் துறக்கிறதே
நீ ஒரு முறை என
இறங்கிடும் முன்னே
மாய மௌனம் கேட்க்கிறதே
கனவினில் கடல் என
இரு விழி தவிக்குதே
வளையளுள் வலைகள் வீசாயோ
காதலை சொல்லிடும்
வகுப்புகள் புதியதே
இரவினில் உரைகள் சொல்லாயோ
இரு உடல் ஒன்றினால்
கணக்கொன்று சொல்லும்
புரிந்தே நானும் மயங்குகிறேன்
பிறை நிலா போல் உந்தன்
காடுகள் மேலே சாரல்
மழையை தூவுகிறேன்
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா
மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா
Idhamaai Idhamaai Song Lyrics from movie Kolaigaran. Idhamaai Idhamaai song sung by Keerthana Vaidyanathan. Idhamaai Idhamaai Song Composed by Simon K. King. Idhamaai Idhamaai Song Lyrics was Penned by Dhamayanthi. Kolaigaran movie cast Vijay Antony, Ashima Narwal in the lead role actor and actress. Kolaigaran movie released on 2019