Jeyithukonde Iruppen

Jeyithukonde Iruppen Song Lyrics In English

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் தேசத்தின் பேர் காக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் உலகங்கள் பாராட்ட

அன்னை பூமியில் ஆடும் கொடிதனை உலகம் வணங்கிடக் காட்டுவேன் அன்பே பெரிதெனும் மந்திரம்தனை எங்கள் வாழ்வென நாட்டுவேன் ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் தேடும் தொழிலொரு கோடி கோடி காணும் பூந்தோட்டம்

வண்ணம் மின்னும் அழகிய பெண்கள் துள்ளும் மானாட்டம் வானம் தழுவும் கட்டிடம் கண்டேன் சொர்க்கத் தேரோட்டம்

எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட இந்த அனுபவம் போதுமே மக்கள் சக்தியில் பாரதம் இந்த மண்டலத்தினை வெல்லுமே ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் தேசத்தின் பேர் காக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் உலகங்கள் பாராட்ட

காலை எழுந்ததும் ஆணும் பெண்ணும் என்ன துடிதுடிப்பு காலும் கையும் எந்திரம் போலே என்ன சுறுசுறுப்பு

பள்ளிக் குழந்தைக்கும் தேசத்தின் மீது இணையிலா மதிப்பு பார்க்க பார்க்க டோக்கியோ நகரம் எங்கும் கலகலப்பு

எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட இந்த அனுபவம் போதுமே மக்கள் சக்தியில் பாரதம் இந்த மண்டலத்தினை வெல்லுமே ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஜோதி மயமாய் தோன்றுது இங்கே என்ன மின்சாரம் ஜோதி மயமாய் தோன்றுது இங்கே என்ன மின்சாரம் தொழிலில் கூட உதவி செய்கின்றாள் நல்ல சம்சாரம்

உழைக்காதவனே இல்லை என்பது உலகுக்கொரு பாடம் உலகச் சந்தையில் ஜப்பான் பொருளே ஓடி விளையாடும்