Kaadhal Maharaani Kavidhai

Kaadhal Maharaani Kavidhai Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅ

காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

இந்தக் காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூ மடல்
பூ உடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே
குளித்தால் மகிழ்வேன்

மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனி போல்
மெதுவாய் தழுவு

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடித் தூங்கும் நேரம்

இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்


ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

உன் முக தீபத்தில்
ஓவியம் மின்னுதே
உன் அழகால்
இரவைப் பகலாய் அறிந்தேன்

மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா
கவிதை பூ விரித்தான்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தான்
முத்துப் போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்
இந்தக் காதல் யுவராஜா
கவிதை பூ விரித்தான்

புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்