Kaathiruppan Kamalakannan

Kaathiruppan Kamalakannan Song Lyrics In English


காத்திருப்பான் கமலக் கண்ணன்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்
அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென் மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

கோபியர் கொஞ்சும் சல்லாபன்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேய்ங் குழலிசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேய்ங் குழலிசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்

தாவிப் பிடிப்பான்
ஆஆஆஆஆஆ
தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான்
தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை
உருவம் வரைந்து கொண்டு அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்

வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணை இசைக்கச் சொல்லி
வேண்டுவான் சிலநேரம்
வீணை இசைக்கச் சொல்லி
வேண்டுவான் சிலநேரம்


வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
பாடுவான்ஆ
அதற்கவள் ஆடுவாள்ஆஆ

பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
மறு நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் வந்து

காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்