Kannukku Kannana Katchi

Kannukku Kannana Katchi Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி

கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி

கண்ணுக்கு கண்ணான காட்சி

மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது தன்னை மறந்தாடும் வேளையிலே இடி தாளங்கள் போடும் தப்பாது

கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி


ஆஆஆஆஅ பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம் சீருடன் ஆடுவதெல்லாமே

கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி

மண்ணில் மொழி தோன்றும் முன்னே தன் கண்களினால் எண்ணம் தன்னை இன்னொருவர் உணர சொன்னதெல்லாம் இணையேதும் இல்லாத அபிநயமே

கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி