Kikkikkikkee Kiliyakkoi

Kikkikkikkee Kiliyakkoi Song Lyrics In English


கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய் சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய்

தேதி இல்லாத பஞ்சாங்கமா ஆசை எனக்கில்லையா ஆஆ நிலவு இல்லாத பௌர்ணமியா நேரம் அதுக்கில்லையாஆ நேரம் அதுக்கில்லையா

என் கையாலே பூப்பறிக்க என் கண்ணாலே அளவெடுக்க அம்மாடி வந்தாலென்ன பேரானந்தம் தந்தாலென்ன

மேகம் மூடாத மலையில்லையே மெல்ல நெருங்குங்களே தாகம் இல்லாத தண்ணில்லையே தொட்டு தழுவுங்களேன்ஆ தொட்டு தழுவுங்களேன்

ஏன் பேராசை வருகின்றது உன் பெண்மைக்கு புரிகின்றது என்னை நீராட சொல்கின்றது இப்ப தானாக தருகின்றது


கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

போதை உண்டாகும் திராட்சை பழம் பூஜை செய்வேனெம்மாஆ காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி கட்டாயம் தேவையம்மாஹா கட்டாயம் தேவையம்மா

உன் கைரெண்டும் பொல்லாதது எந்த காவலும் இல்லாதது அது எங்கெங்கோ செல்கின்றது சும்மா ஏதேதோ சொல்கின்றது

கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய்

இருவர் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்