Kumari Pennin Ullathile

Kumari Pennin Ullathile Song Lyrics In English


குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்

குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்

குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்

காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்

குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்

குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்



குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்

காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம்
தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்

அவள் உன்னை
கண்டு உயிர் காதல்
கொண்டு தன் உள்ளம்
தன்னையே தருவாள்

நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே
புரியும்

கை தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்


தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்

குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்

குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்

பூவை என்பதோர்
பூவை கண்டதும் தேவை
தேவை என்று வருவேன்

இடை மின்னல்
கேட்க நடை அன்னம்
கேட்க அதை உன்னை
கேட்டு நான் தருவேன்

கொடுத்தாலும்
என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு
குறையாது

அந்த அழகே
வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ
பெறலாம்

குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்

குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்

குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்

காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்