Maanikka Theril

Maanikka Theril Song Lyrics In English




மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

ராணி உந்தன்
மேனி என்ன ராஜ வீதி
தோற்றம் தானோ

கேள்வி கேட்ட
மன்னன் மேனி தேவன்
கோவில் தோற்றம்
தானோ

மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

வென்பட்டு
மேனியில் கண்படும்
வேளையில் மூடுது
மேலாடை

கண் படும்
வேளையில் கை
படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ
சதிராட்டம்

இலைகளில்
ஆடும் கனியாட்டம்

கண்ணோட்டம்
என் தோட்டம்


மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

தென்மலை
மேகங்கள் பொன்வலை
போட்டன கூந்தலில் நீராட

மின்னலில்
மேனியும் பின்னலில்
கூந்தலும் மிதப்பது
யாராட புது மழை
போலே நீரோட

அதிசய
நதியில் நானாட

நீயாட

ஆஹா தேனோட

மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது