Manadhil Urudhi Vendum

Manadhil Urudhi Vendum Song Lyrics In English


மனதில் உறுதி
வேண்டும் மனதில் உறுதி
வேண்டும் வாக்கினிலே
இனிமை வேண்டும் நினைவு
நல்லது வேண்டும் நெருங்கின
பொருள் கை பட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

கனவு மெய் பட
வேண்டும் கைவசமாவது
விரைவில் வேண்டும் கனவு
மெய் பட வேண்டும் கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

கண் திறந்திட
வேண்டும் காரியத்தில்
உறுதி வேண்டும் பெண்
விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க
வேண்டும்


மண் பயனுற
வேண்டும் மண் பயனுற
வேண்டும் வானகம் இங்கு
தென்பட வேண்டும் உண்மை
நின்றிட வேண்டும் ஓம் ஓம்
ஓம் ஓம்