Manchal Mugame

Manchal Mugame Song Lyrics In English


மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

பெண் பார்த்துக் கொண்டபோது
தலை மண் பார்க்க நின்ற மாது
தென்பாங்குச் சேலை குலுங்க
என்னைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க

கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
உறவாட வந்த மனமே
இது உன்னால் விளைந்த சுகமே

மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக


கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

கேட்டாலும் காதல் கிடைக்கும்
மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும்
அது குளிர்காலம் போல விளங்கும்

முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும்
நான் அறியாத இன்பம் இன்பம்

மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக