Muthu Charame Mullai

Muthu Charame Mullai Song Lyrics In English

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே லாலாலலாலலால்லா(2)

சின்ன சின்ன குழந்தை உள்ளம் சேர்ந்து வாழும் உலகம் அன்பு என்னும் சரித்திரத்தின் ஆரம்பமாய் திகழும்

உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னை பெற்ற அன்னையாக மாறிவிட்டேன் கண்ணே

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே

கொஞ்சி கொஞ்சி பேசுகையில் கொடி மலரோ சிரிக்கும் தத்தி தத்தி நடக்கையிலே தமிழ் நடை போல் இருக்கும்

ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஐயிரண்டு திங்கள் வரையில் தாய் வயிறு தொட்டில்

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே

அள்ளி அள்ளி அணைத்திடவே துள்ளுதுதடா உள்ளம் உன்னை எண்ணி பாடுகையில் ஊறுதடா இன்பம்

காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும் நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே

{லாலாலலாலலால்லா லாலாலலாலலால்லா}(2)