Nadaga Sangeetha Nadamadadi

Nadaga Sangeetha Nadamadadi Song Lyrics In English




நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்

கால்கள் செய்கின்ற தாளம் ஆயிரம்

அங்கம் எங்கணும் பாவம் ஆயிரம்
அழகு பொங்கிடும் லலிதா காவியம்
மங்கையர் மேனியில் தாங்கும் ஓவியம்
ஆ ஆஅ ஆ
நாடக சங்கீத நடமாடடி

ஓகோ ரம்பா சகல கலாநிதி ரம்பா
வானம் பூமியிலும் நீயே ராணியடி
சங்கீதத்தில் ஞானியடி
ஏடி உன் ஆடல் பாடல் உல்லாசம்
ஏடி உன் ஆனந்த பாவனை வேகம்



அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி
மேக நாதனது பிரிய ராகினி

அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி
மேக நாதனது பிரிய ராகினி

கலைவாணி போலே இசை பாடுவேன்

கலைவாணி போலே இசை பாடுவேன்
காவிய நாயகி தேவ தேவதை
கற்பனை அற்புதம் காட்டும் ஈஸ்வரி
ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி
ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி

நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி

ஓகோ ஊர்வசி அதிரூப சௌந்தர்ய ராசி
ஏடி உன் மோகனக் கண்களில் சாகச மோகம்
ஏடி உன் நளின மனோகர நவரச பாவம்


மன்மதன் இசைக்கும் சங்கீதமே
ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
மன்மதன் இசைக்கும் சங்கீதமே
ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே

திருமந்திரம் புது மணமங்கலம்
கோடி சொர்க்கங்கள் உருவாக்கும் மகராணியே

முடிவிலாதோர் ஆனந்த நாயகி

என் பெயர் என்ன ஊர்வசியா நான் சாருகேசி

நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி

ஓஹோ மேனகா அழகுத் தோகையே
ஆனந்தம் உன் ராசலீலை
ஆரம்ப ஸ்ருங்காரச் சோலை
ஆனந்தம் உன் ராசலீலை

ஒளியழகே எந்தன் விழியழகு
ஒளியழகே எந்தன் விழியழகு
உலவிடும் மேகம் உல்லாசப் பொன்னோடமே

என் கைகள் தீண்டினால்
என் கால்கள் ஆடினால்
மதுவில் இல்லாத மயக்கம் உண்டாகும்
மனதில் இன்பநிலை ஓடும்
அதில் வானுலகம் அசைந்தாடிடும்
சாரங்கக் கண்மணி நான்

நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி