Neelaveni Amma

Neelaveni Amma Song Lyrics In English


ஆண் நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி

ஆண் நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி
மாக்கான்னு நெனைக்காதக்கா
கேக்காம பதில் சொல்லக்கா
அஞ்சாத ஆம்பளையா
ஒரு பொண்ண தேடி வந்தோம்
அழகா ஆடிப் பாடி வந்தோம்
அவ பேரு நீலவேணி
நல்ல மாமன் வீட்டு ராணி

ஆண் நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி

தோணி மீது பாடும் குயிலு
தோழியோடு போகும் மயிலு
ஜாடை காண ஆடை காண
தாகம் கூடிப் போனதோ

ஆத்து மேலே போகும் தோணி
அதுக்கு மேலே ராஜா ராணி
பாட்டுக் கேட்டு நோட்டம் போட
பார்வை தேடிப் பாடுதோ

தேடித் தேடிப் பாரையா
சின்ன மயிலு நான் அய்யா
தேடித் தேடிப் பாரையா
சின்ன மயிலு நான் அய்யா
தேவ லோக ராணி போல
வாழுகின்ற ஆள் அய்யா

ஆண் மாக்கான்னு நெனைக்காதக்கா
கேக்காம பதில் சொல்லக்கா
அஞ்சாத ஆம்பளையா
ஒரு பொண்ண தேடி வந்தோம்
அழகா ஆடிப் பாடி வந்தோம்
அவ பேரு நீலவேணி
நல்ல மாமன் வீட்டு ராணி


ஆண் நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி

கூந்தல் என்ன ஆலம் விழுதோ
குங்குமம் தான் காலைப் பொழுதோ
சேந்த ரெண்டு சேரன் வில்லு
புருவம் ஆகிப் போனதோ

கண்கள் ரெண்டு மீனோ மானோ
கன்னம் என்ன பூவோ பொன்னோ
சின்ன வாயில் என்ன சாயல்
பவளமாக ஆனதோ

பார்த்ததுதான் இல்லையே
பறித்திடாத முல்லையே
பார்த்ததுதான் இல்லையே
பறித்திடாத முல்லையே
பார்க்க வேண்டும் கேட்க வேண்டும்
கேட்டிடாத கேள்வியே

ஆண் மாக்கான்னு நெனைக்காதக்கா
கேக்காம பதில் சொல்லக்கா
அஞ்சாத ஆம்பளையா
ஒரு பொண்ண தேடி வந்தோம்
அழகா ஆடிப் பாடி வந்தோம்
அவ பேரு நீலவேணி
நல்ல மாமன் வீட்டு ராணி

ஆண் நீலவேணி அம்மா நீலவேணி
நீலவேணி அம்மா நீலவேணி