Oorai Yeikkum Unakku

Oorai Yeikkum Unakku Song Lyrics In English

ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே

ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே

நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம் நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம்

நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம் இன்று புயலானதுஆஅ ரத்தம் கொதிப்பேறுது

ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே

கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா

ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால் நாடு அதை தாங்குமோஓஒஓ நன்மை அரங்கேறுமோ

ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே ஏ

நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு

தூங்கும் இளந்தோழர் துயில் நீங்கி எழுந்தால் வீரம் விளையாடுமேஆ நியாயம் பயிராகுமேஏ

ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே அஹாபூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே

இருவர் : பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே