Paesi Paesi

Paesi Paesi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தமன்

இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு

பேசி பேசி
உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல்
போட சொல்லி உள்ளம் கேட்குதே

யானை மேல ஊர பார்க்கும்
ஒரு சின்ன புள்ளையா
ஏங்கி வாடும் என்ன பார்த்தா
அது பாவம் இல்லையா

ஒரு வார்த்த சொல்லடி
என் வாழ்க்கை மாறிடும்
மனம் கல்லா மனம் கல்லா
அத நல்லா பாரடி

இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு


பேசி பேசி
உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல்
போட சொல்லி உள்ளம் கேட்குதே

சாமி கண்ண குத்தாதே
கடலும் வத்தி போகாதே
உள்ளுக்குள்ள என்ன எண்ணம்
சொல்லி போயேண்டி

கூச்சம் ஏதும் இல்லாம
கெஞ்சி கேட்டேன்டி
ஏ பாவி
ஊசி ஏத்தும் கண்ண காட்டி
ஏண்டி என்ன கொன்ன

அடி இந்தா
உயிர் இந்தா
உயிர் இந்தா
கொண்டு போ

இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

மிஞ்சி மிஞ்சி போனாலும்
நெஞ்சு இன்னும் மூனே நாள்
தாங்கிடாது போல இருக்கு
செய்தி சொல்லடி

என்ன ஏதும் தெரியாம
நானும் நின்னேனே
அடி பாவி
மௌனத்தால கொன்ன
பாரங்கல்லு போல நின்ன
மனம் கல்லா மனம் கல்லா
அத நல்லா பாரடி