Penne Maanthartham (Penmai Endra)

Penne Maanthartham (Penmai Endra) Song Lyrics In English


பெண்ணே மாந்தர் தம்
பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே

மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்


பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையைப் போல்
பெரிய தெய்வம் ஏதம்மா
பெரிய தெய்வம் ஏதம்மா

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே