Poove Malligai Poove

Poove Malligai Poove Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் பி ஜெயச்சந்திரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதடி

பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதம்மா பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதம்மா

பூவே மல்லிகை பூவே

காலில் நடுக்கம் என்ன கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன மேனி கொதிப்பதென்ன – உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன

ஆசையோ இல்லை மோகமோ ஒரு தாகம் வருவதென்ன இனிய சுகங்கள் என்னை தழுவுவதை பார்க்கிறேன்


முதல் முறை பயம் வரும் மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா

பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதம்மா பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதடி

மெல்ல தழுவுங்களேன் என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா நீயும் புதிய கதை என் வாழ்வினில் நாளும் தொடரும் கதை

போதுமே உங்கள் பார்வைகள் அந்த போதை தெளியட்டுமே அழகு கிளியே கண்ணே மழலை மொழி சொல்லடி அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு நானும் பழகுகிறேன் ஆஹா

பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதம்மா

பூவே மல்லிகை பூவே பூவே மல்லிகை பூவே பூவே மல்லிகை பூவே