Pothumada Sami Ponnu

Pothumada Sami Ponnu Song Lyrics In English

பாடகி : பி சுஷீலா

இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

தேவியடி மாரியம்மா சிரிப்பா சிரிக்கிறியே! என்னை சிரிப்பா சிரிக்க வைத்து சிலையா நிக்கிறியே!

போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

நாதியில்லா பூமி இது நன்மையில்லா நாடு போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

நாதியில்லா பூமி இது நன்மையில்லா நாடு போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

பசித்தபோது சோறெடுத்துக் கொடுத்த கையைக் கடித்துப் பார்க்கும் ஜனங்களே

பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம் உங்களோடு பிறந்து வந்த இனங்களே

பசித்தபோது சோறெடுத்துக் கொடுத்த கையைக் கடித்துப் பார்க்கும் ஜனங்களே

பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம் உங்களோடு பிறந்து வந்த இனங்களே

பூஜை செய்வீரே பெண்ணை தேவி என்பீரே வாழ்வில்லாத பெண்ணினத்தைப் பாவி என்பீரே

போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

இடமில்லாமல் கோயில் கட்டி மடங்கள் கட்டி குளங்கள் வெட்டிப் போடுங்கள்

இரண்டு கையில் விளக்கெடுத்து இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்

இடமில்லாமல் கோயில் கட்டி மடங்கள் கட்டி குளங்கள் வெட்டிப் போடுங்கள்

இரண்டு கையில் விளக்கெடுத்து இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்

கண்ணை வைத்தானே இரண்டு கையை வைத்தானே – அவன் மனசை மட்டும் எடுத்து வைக்க மறந்து விட்டானே

போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

அந்தக் காலம் பக்தனுக்கு வந்து வந்து காட்சி தந்த கடவுளே

இந்தக் காலம் நீங்களெல்லாம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல

அந்தக் காலம் பக்தனுக்கு வந்து வந்து காட்சி தந்த கடவுளே

இந்தக் காலம் நீங்களெல்லாம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல

கல்லைத்தான் கண்டோம் வெறும் செம்பைத்தான் கண்டோம் – இரு கண் திறந்து பெண்ணைப் பார்க்கும் கருணையைக் காணோம்

போதுமடா சாமி பொண்ணுப்பட்ட பாடு

இறைவனுக்கே கண் கொடுத்தான் எங்களைப்போல் மனிதனான கண்ணப்பா

மனிதனுக்குக் கண் கொடுக்க இறைவனாலும் முடியலையே ஏனப்பா

சாத்திரம் பொய்யோ கேட்ட சரித்திரம் பொய்யோ நாங்கள் ஆத்திரத்தில் படைத்துக் கொண்ட ஆண்டவன் பொய்யோ