Sakka Podu Podu Raja

Sakka Podu Podu Raja Song Lyrics In English


சக்க போடு போடு ராஜா

டேய் டேய்
என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட

நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது

ஆமா மழை பெய்யுது
நீ வந்து கொடை பிடி ஏண்டாங்

சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா

ஆ இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல

மல்லியப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா
நான் பஞ்சணையில் கொஞ்சுவேன்
நீ போக போக பாரேன்டா



சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

நல்ல சமயம் இதை விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே

என்ன என்ன என்னடா நல்ல சமயம்

வெள்ளி நிலா காயுது
வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளிக் கை இரண்டில்
ஏந்திக் கொள்ளடா


சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே
ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள் உண்டான தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டோடுமோ

ஆமான்டா
இப்படி பழமொழிய பேசியே
பொழுத கழிச்சிகிட்டிரு

போடா போ பழம் பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி பொண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறென்னடா ஹோ

சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு
நீ பயந்தா என்னாவது

தானா கனியற கனிய
ஏன்டா தடியால அடிச்சி கனிய வைக்கணும்
டேய் என்ன நீ மொறைக்காதே

போராட்டம் இள நெஞ்சத்திலே
உண்டான இந்த நேரத்திலே
உன்னாலே நான் பட்ட தொல்லைகள் போதாதோ
எட்டிப் போனால் என்ன

என்னையாடா எட்டி போகச் சொல்ற

உன்னோடு நான் உண்டானவன்
உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை
பிரிக்க முடியாதடா

போதும் போடா நீயும் வாடா
வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே அடக்க நினைக்காதே
அடிப்பேன்டா நடக்காது
உதைப்பேன்டா முடியாது

ஏன்டா முடியாது
கட்டிப் புடிப்பேன்டா
கழுத்த நெறிப்பேன்டா