Solai Malai Ooram

Solai Malai Ooram Song Lyrics In English


சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்

பாட்டாலே நான்
போட்ட பூவாரமே
படிப்பேனே நம் காதல்
தேவாரமே
உன் பேரை நான் பாட
தேனூறுமே
என் ஜீவன் உன்னோடு
இளைப்பாறுமே

பாடி அழைத்தேன்
உனையே வருவாய் குயிலே
தேடி தவிக்கும் மனமே
தினம் வா மயிலே
காதலெனும் ராகம் தாளம்
கூடும் இடமே

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்


நான் பாடும்
பாட்டென்றும் நீதானய்யா
நீயின்றி வாழ்வேனோ
நான்தானய்யா
வாழ்வென்று வாழ்ந்தாலே
உன்னோடுதான்
வா எந்தன் கண்ணா
நீ என்னோடுதான்

ஜீவன் இருக்கும் வரைக்கும்
உனையே நினைக்கும்
சேர துடிக்கும் இதயம்
உனையே அழைக்கும்
கூட வரும் காலம் நேரம்
இன்றே பிறக்கும்

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா

சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்