Sontham Endru

Sontham Endru Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா



சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா

அன்பாலதான் அள்ளி அணைச்ச
ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா

சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா

கொண்டு வந்து தந்தாலென்ன
ஒன்றும் இன்றி வந்தாலென்ன
ஒரு நாளும் உள்ளம்
நொந்ததுண்டா உண்டா

மண்ணும் பொன்னா தந்தா என்ன
வானம் பொய்யா போனா என்ன
ஒரு வேளை இல்லை
என்றதுண்டா உண்டா


வெய்யிலில் நிழல்
வெய்யிலில் நிழல் வேண்டுமென்று
மரம் வளர்ப்பது உண்டு
வயதில் துணை வேண்டுமென்றா
எனை வளர்த்து வந்தாய்
உந்தன் அன்புக்கிங்கே
காரணமே இல்லை
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா

சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா

காந்தியைத்தான் பெற்றால் என்ன
புத்தனையும் பெற்றால் என்ன
பெறும்போது தாய்க்கொன்றும்
பெருமை இல்லை

முடவன் என்று வந்தால் என்ன
குருடன் என்று சேர்ந்தால் என்ன
அதனாலே அவர்க்கொன்றும்
சிறுமை இல்லை

வளர்த்த மகன் முரடன் என்றால்
வெறுத்திடுவாளா
வயதில் துன்பம் வந்ததென்றால்
விரட்டிடுவாளா
உனக்கு இணை நீயே
எவரும் இங்கே இல்லை
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா

சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா