Vaadi Vambu Pennae

Vaadi Vambu Pennae Song Lyrics In English


ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்

வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்சள் தாலி
தாரான் தாரான் தாரான்
தாரான்

ஆட்டம் பாட்டம்
எல்லாம் இத்தோட
நிப்பாட்டு மாமன் அத்த
மெச்சும் பொண்ணுன்னு
நீ காட்டு சுருட்டிக்கோ
வால தான் அடக்கிக்கோ
வாயதான்

வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்சள் தாலி
தாரான் தாரான் தாரான்
தாரான்

நிச்சயம் ஆச்சுது
நாலு பேரு முன்னே
நாளை நீ வேறொரு
வீடு போகும் பெண்ணே

அன்பு தோழி
தான் நானே சொல்ல
கேளடி மானே தங்க
தாமரை தேனே கேள்
ஏன் யோசனை

நேத்து பட்டு
பூச்சி போல தான்
திரிஞ்ச கையில்
அடங்காத காத்தாட்டம்
இருந்த பேசி முடிவாச்சு
கல்யாணம் தான் போட
வாரான்டி கடிவாளம்
தான்


வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்



எப்பவும் புருஷன
அனுசரிச்சு பாரு ரொம்பவும்
குட்டினா நிமிந்து நின்னு
கேளு

சொல்லி தந்தவன்
யாரு மீச கவிஞன் தான்
பாரு புதுமை பெண்ணென
மாறு உன்னை வாழ்த்தும்
ஊரு

சின்ன பெண்ணாட்டம்
செய்யாத சேட்ட ஆண்டு
அனுபவி நீ வாழும் வீட்ட
தோழி சொன்னாக்க
ஒத்துக்கடி பிள்ள
ஒன்னொன்னு பெத்துகடி

வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

ஊர கூட்டி
வச்சு உணவாக
மஞ்சள் தாலி தாரான்
தாரான் தாரான்
தாரான்