Vaanil Muzhu Madhiyai

Vaanil Muzhu Madhiyai Song Lyrics In English


வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன் ஓஓஒ

கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழ நிறத்தைப் போலே குமரி அவள் உதட்டைக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்

சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலை தென்னம்பாளைப் போலே தோகை அவள் சிரிக்கக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்


மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலைத் தேனின் இனிப்பைப் போலே மாது அவள் பேசக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்

தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் கனவிலேயும் அந்தப் பெண்ணே கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன் ஓஓஒ