Votu Kettu

Votu Kettu Song Lyrics In English


ஹாஆஅஆஆஆஆ
ஆஅஆஅஆஆஆஆஅஆஆஅ
ஹாஆஆஆ

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு

உன்னோட சேதி தெரிஞ்சதும் வீதி
கொல்லுன்னு சிரிக்காதா

கழுதையில் ஏத்தி கரும் புள்ளி குத்தி
ஊர்கோலம் நடத்தாதா

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

அம்மன் கோயில் சூரத் தேங்கா
விழுந்து பொறுக்கினே

அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம் ஆடு திருடுனே

அப்போ நீயும் ஏழு மாசம் கம்பி எண்ணுனே

புத்தன் போல வேஷம் போட்டு ஃப்ராடு பண்ணுனே

அடிக்கடி இங்கு பேட்ட ரவுடியா
அடிதடி சண்ட போட்டதில்லையா
கருக்கலில் தினம் பான பானையா
கலக்கல இங்கு காய்ச்சவில்லையா

ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்

பெண் தகுதிய காத்தில் விட்டாராம்
தொகுதிய கோட்டை விட்டாராம்

திருடர்கள் உனைப் போல் ஜெயிச்சா போச்சு
தினசரி சட்டசபையில் அடிதடி தான்

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

புளுகிப் புளுகி ஓட்டுக்கள கேக்காதே

பெண் புளுகிப் புளுகி ஓட்டுக்கள கேக்காதே

பழைய பேச்சு பழகிப் போச்சு ஏய்க்காதே

பழைய பேச்சு பழகிப் போச்சு ஏய்க்காதே


அரச்ச மாவ திரும்பத் திரும்ப அரைக்காதே

பெண் அரச்ச மாவ திரும்பத் திரும்ப அரைக்காதே

உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

பெண் உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

ஹேய் ஹேய் ஹேய் டுர்ர்

சின்ன வீடு நாலு வெச்சு குடும்பம் நடத்துறே

கள்ளத் தோணி மேல ஏறி சரக்கு கடத்துறே

கப்பல் மேல மாமன் ஏறும் காலம் நெருங்குது

இப்போ நானும் போடும் முடிச்சு கழுத்தில் எறங்குது

வசதிக்குப் பல வால பிடிக்குற
பதவிக்குப் பல கால பிடிக்குற
மணலில் இங்கு கயிறு திரிக்குற
மதி கெட்டு நித்தம் வயிறு வளக்குற

பெண் ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்

ஓட்டுக்கு ரேட்ட ஏத்தினாராம்
நாட்ட நல்லா ஏமாத்தினாராம்

சரித்திரம் இனி மேல் திரும்பும் பாரு
திரண்டது மக்கள் படை இன்று உனக்கெதிரே

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு

உன்னோட சேதி தெரிஞ்சதும் வீதி
கொல்லுன்னு சிரிக்காதா

கழுதையில் ஏத்தி கரும் புள்ளி குத்தி
ஊர்கோலம் நடத்தாதா

ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி
நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி
மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சுஹான்