Aadamal Aadugiren |
---|
ஆடாமல் ஆடுகிறேன்யேயேன்
ஆடாமல் ஆடுகிறேன்யேயேன்
பாடாமல் பாடுகிறேன்யேயேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
விதியே உன் கை நீட்டி
வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து
விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க
பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன்
வா வா வாவாவா
குயிலே உன் சிறகொடித்து
இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து
நடம் பார்க்கிறார்
ஆஅஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆஅஆஆஅஆ
குயிலே உன் சிறகொடித்து
இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து
நடம் பார்க்கிறார்
இளம் பெண்ணின் கண்ணீரை
யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா