Aadhi Nathan Ketkindran |
---|
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன்
நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ வேதன் சொல்வான் வேதங்கள் விளக்கம் சொல்வேன் நானம்மா மாதர் குலத்தின் பூங்கொம்பு மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப் பூவைத் தர வேண்டும் காதல் நாரில் தொடுத்தாலும் காலம் பார்த்துத் தர வேண்டும்
கையெனும் மலரும் கண்ணெனும் மலரும் காவலன் தனக்காகவே என் காவலன் தனக்காகவே
நெய்யிடும் குழலும் தாமரை முகமும் நெய்யிடும் குழலும் தாமரை முகமும் மலர்ந்தது எனக்காகவே நான் வந்ததும் உனக்காகவே
தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக
வாழ உனக்கொரு வரம் வேண்டும் மன்னன் நானதைத் தர வேண்டும்
ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதி நாதன் கேட்கின்றான் கேட்கின்றான்
மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு கொண்டது உனக்காகவே என் கோலமும் உனக்காகவே
அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு யாவையும் எனக்காகவே என் ஆசையும் உனக்காகவே
கூந்தல் சூடும் பிறையாக கூட ஆடும் மானாக நீந்தி வருவாள் மதியென்று நினைத்து வந்தேன் நானின்று
ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்