Aadi Varum Poongodi Azhagile |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆஹா அலை போலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா
ஆசை வலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா திண்டாடுதா
வாருங்க மைனர் சார் உங்க வாழ்க்கையே ஜாலிதான் பாருங்க பர்சையே அது என்றுமே காலிதான் தனிக் கவர்ச்சியுண்டு இவர் பேசிலே அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே
உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே கோபமா மனஸ்தாபமா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா
ஆட்டத்தில் நாட்டமா ஆள் மீது கண்ணோட்டமா பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா கை தாளம் தவறாமல் போடுதே கலை ஞானி போல் தலையாடுதே
அந்தரத்து மின்னலை சொந்தங்கொள்ள எண்ணினால் நடக்குமா அது கிடைக்குமா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா
தோற்றத்தில் துறவி போல் வெளிவேஷம் போடுவாங்க கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடுவாங்க ஏமாற்றும் ஆசாமி நொடியிலே ஏமாளி ஆவானே முடிவிலே
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆஹா அலை போலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா