Aadi Varum Then Nilavai |
---|
இசை அமைப்பாளர் : பி ஏ சிதம்பரநாதன்
பாடல் ஆசிரியர் : குமாரதேவன்
ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா உல்லாசம் பொங்க பொங்கதானே வாழ்வில் இன்பம் இன்பம் ஒரு கோடி இன்பம்
ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா
அப்பா மனசு ஆண்டவன் மனசு அவருக்கு நானொரு செல்லக்கிளி ஊர் ஒன்று கேட்டால் உலகத்தையே கொடுத்து போதுமா என்பது வந்த வழி
இந்த வீட்டிற்கு நானே மகராணி இங்கு நடப்பதெல்லாமே என் ஆட்சி எல்லாம் இங்கே இன்பமயம் எல்லாம் இங்கே இன்பமயம் இதற்கு நானொரு அத்தாட்சி
ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு உயிராய் காப்பவள் நீயம்மா இங்கு என் சுகம் ஒன்றே உன் சுகம் என்று இன்பமாய் வளர்க்கும் தாயம்மா
நீ கட்டிய உன் மனக் கோட்டையிலெல்லாம் கண்மணி இருப்பாள் பாரம்மா காலங்கள் எல்லாம் கை வசமாகும் காலங்கள் எல்லாம் கை வசமாகும் அம்மா நல்லாசி கூறம்மா
ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா