Aadum Alaigal Polave |
---|
ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே மௌனக் குயில் பாடும் கீதம் அது உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா
ஆடும் அலைகள் போலவே
உன்னை நினைத்தேன் நெஞ்சில் கதை வரைந்தேனே உன்னோடு அதை நான் பேச தினம் துடிக்கின்றேனே புது புது கனவினில் நானே நீராடி பூச்சூடி வாழ்ந்தே பார்ப்பேன் கண்ணா
ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே
பேச நினைத்தால் ஊமைக்கிளி என்ன பேசும் நீயாக உன் வாயாலே சொல்ல தயக்கம் ஏனோ நரை திரை வருகிற போதும் பிரியாமல் மாறாமல் சேர்ந்தே வாழ்வோம் கண்ணா
ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே மௌனக் குயில் பாடும் கீதம் அது உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா
ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே