Aala Pirandha Rajan |
---|
ஆளப் பொறந்த ராஜன்
பாடு திண்டாட்டமய்யா
டியாலோ திண்டாட்டமய்யா
இப்போ அடுத்துக் கெடுத்த மந்திரிக்கி
கொண்டாட்டமய்யா
இப்போ கொண்டாட்டமய்யா
அபேலே ராஜா கேளு
சுபேலே ராஜா அய்சா
அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா
மூளையிருந்தும் ராஜாக் குட்டி
மோசம் போனான்டி
ராஜா மோசம் போனான்டி
முட்டாத்தனமா ராஜ்ஜியத்தைக்
கோட்டை விட்டான்டி
ராஜா கோட்டை விட்டான்டி
அபேலு மயிலே
கேளடி சுபேலு மயிலே அய்சா
அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே
குயிலுக் கூட்டில் கோட்டான் இப்போ
குடியிருக்குதய்யா
கோட்டான் குடியிருக்குதய்யா
ஆடும் மயிலைப் போல வேஷம் போட்டு
மந்தி நடிக்குதடி
பாத்து சந்தி சிரிக்குதடி
அபேலு மயிலே
கேளடி சுபேலு மயிலே அய்சா
அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே
ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய்
அவலக்ஷண ராஜா போல
ஆள வந்தவன்டி
ஓ ஆந்தைக் கண்ணன் ராஜ முழி
முழிக்கப் பாத்தவன்டி
அது வெளியே தெரிஞ்சுப் போச்சு
அவன் வேஷங் கலையலாச்சு
ஓ விடியுமுன்னே வேலையை முடிப்போம்
வெத்தலைச் சருவைப் போட்டுக்க போட்டுக்க
போட்டுக்க