Aandavane Kann Thirandhu |
---|
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் அதிகார மாமியாரின் அட்டகாசங்கள் அதிகார மாமியாரின் அட்டகாசங்கள் அவள் அகம்பாவ நாவினிலே மேளதாளங்கள் டெளரி மேளதாளங்கள்
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள் தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள் மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள் தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள்
ஒரு மகனை சுமந்ததாலே உலகை கேட்கிறாள் இவளே தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் வடிக்கிறாள் இங்கு கண்ணீர் வடிக்கிறாள்
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான் தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான் குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான் தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான்
சந்ததிகள் தரும் துணையை நிறுத்து பார்க்கிறான் முச்சந்தியிலே வேசியிடம் வீசி எறிகிறான் காசை வீசி எறிகிறான்
கருவினிலே இருவருக்கும் பத்து மாதமே மண உறவினிலே அனைவர்க்கும் வர்க்க பேதமே ஆடவரே உயர்வு என்று என்ன சட்டமோ அந்த ஆடவரை பெற்ற இனம் என்ன மட்டமோ ஏன் அடிமை பட்டமோ
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் சோக கதையைக் கேளுங்கள் சோகக் கதையைக் கேளுங்கள்