Adhukku Piraguthan Adhu

Adhukku Piraguthan Adhu Song Lyrics In English

அதுக்கு பிறகுதான் அது ஹான் எதுக்கு பிறகுதான் ஏது அதுக்கு பிறகுதான் அது ஹ்ம்ம் எதுக்கு பிறகுதான் ஏது இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

அதுக்கு பிறகுதான் அது எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான் இருக்கு கோடி ஆசை தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே செய்யக் கூடுமோ பூஜை

ஒரு பஞ்சாங்கம் பாக்கட்டுமா இல்லை ஆரூடம் கேட்கட்டுமா அடி பொன்னான நேரம் இது நான் சொல்லாமல் யார் சொல்வது

அதுக்கு பிறகுதான் அது எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

பருவ நாடகம் அரங்கம் ஏறிட தருணம் என்ன தேவை பள்ளிப்பாடம் நான் சொல்லி தருகையில் தள்ளி செல்வதோ பாவை

அது பெண்ணோடு உண்டானது என் பிறப்போடு உருவானது மானம் உயிரான பெண்மை இது மன்னன் உணராத உண்மையிது

அதுக்கு பிறகுதான் அது எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம் நாலும் காண வேண்டும் கெட்டி மேளங்கள் கொட்டியான பின் கட்டில் ஆசைகள் தோன்றும்

அதை எப்போது நான் காண்பது அடி இப்போது என்னாவது அந்த கல்யாண காலம் வரை சொல்லக் கூடாதோ காதல் கதை