Adi Meena Neethan |
---|
பாடலாசிரியர் : வாலி
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
தொட்டா என்ன கைப்பட்டா என்ன தோளோடு தோளாக தொத்திக்கடி
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை இது மாறாத மறையாத காதல் கதை இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை இது மாறாத மறையாத காதல் கதை
கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும் நெஞ்சோடு உன் எண்ணம்தான் கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும் நெஞ்சோடு உன் எண்ணம்தான்
உன் உதட்டில் இருக்கும் பாரு நல்ல வெளஞ்ச கரும்பு சாறு அதக் கொடுத்து பசியைத் தீரு இல்லை எடுத்துக் கொள்ளவா
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
தொட்டா என்ன கைப்பட்டா என்ன தோளோடு தோளாக தொத்திக்கடி
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும் மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும் புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும் மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும்
தேராட்டம் கார் மேலேதான் அப்போது ஜோரான ஊர்கோலம்தான் பீப்பீ பிப்பப்பீ தேராட்டம் கார் மேலேதான் அப்போது ஜோரான ஊர்கோலம்தான்
அதை கோடி கண்கள் பார்க்க நல்ல ஜோடியென்று வாழ்த்த அதை எட்டு திக்கும் கேக்க இனி கெட்டி மேளம்தான்
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன
பந்தங்கள் போகாதடி உண்டான சொந்தங்கள் மாறாதடி பந்தங்கள் போகாதடி உண்டான சொந்தங்கள் மாறாதடி
இது நீண்ட கால உறவு இந்த உறவுக்கேது பிரிவு நீயும் தேய்ந்திடாத நிலவு என்னை தழுவிக் கொள்ளவா
அடி மீனா நீதான் கொய்யாக்கனி அடி நானா உன்னை கொத்தும் கிளி
தொட்டா என்ன கைப்பட்டா என்ன தோளோடு தோளாக தொத்திக்கடி ஹா ஹாஹ் ஹா