Adi Naan Vangi Vanthendi Naalu

Adi Naan Vangi Vanthendi Naalu Song Lyrics In English

பாடல் ஆசிரியர்  : வாலி

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு மணக்க மணக்க மயக்க மயக்க இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு மணக்க மணக்க மயக்க மயக்க இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே அந்த பொல்லாத்தனம் இப்போ கூடாதய்யா அந்த யோகாசனம் இப்போ ஆகாதய்யா இதில் ஒனக்கொரு மயக்கமும் எனக்கொரு கிறக்கமும் ஏன்

அட பூ வாங்கி வந்தாலே புரிஞ்சுதய்யா ஆசை அதை பின்னாடி வச்சாலே ஏறுதய்யா போதை மணக்க மணக்க மயக்க மயக்க இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அடி பொண்ணே மக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே அடடடடா அடி பொண்ணே மக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே ஒரே போரானது அந்த காலேஜ் தான் ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான் இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை முடித்திட வா

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு

அட ராஜா உங்க செங்கோலின் ஆணையிங்கு செல்லாதே யுவராணி உந்தன் சிங்காரப் பூவிழியால் கொல்லாதே காதல் விளையாட்டிலே கிருஷ்ணபிரபு அல்லவா ஹாஹாஹா ராஜலீலை செய்ய ராதா நீ அல்லவா இடம் கொடுத்ததும் அடுத்ததை நடத்திட துடிப்பது ஏன்

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு மணக்க மணக்க மயக்க மயக்க இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே