Adikkira Kaathu Yezhainga Pakkam |
---|
பாடலாசிரியர் : வாலி
அடிக்கிற காத்து இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம் அதை நீ புரிஞ்சிக்கடா டேய்அதை நீ புரிஞ்சிக்கடா பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம் பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம் அதை நீ புரிஞ்சிக்கடா டேய்அதை நீ புரிஞ்சிக்கடா
வம்புக்கு நானா வரமாட்டேன் வயத்துல அடிச்சா விடமாட்டேன் உழைப்பவன் யார் நீயா
தப்பிதமாக நடக்காதே தப்பிச்சு ஓட நினைக்காதே பயந்தவன் யார் நானா
பண்ணுவதெல்லாம் பொய் புரட்டு அநியாயம் எத்தனை காலம் செல்லும் உங்கள் அதிகாரம் ஆஹாபட்டாலும் கெட்டாலும் புத்திக்கு நியாயங்கள் எட்டாத ஜென்மங்களோ
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம் அதை நீ புரிஞ்சிக்கடா டேய்அதை நீ புரிஞ்சிக்கடா பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம் இந்த சக்தியில்லாம ஏது சுகம்
பலநாள் திருடன் பிடிபடுவான் பல பேர் கையால் அடிபடுவான் புரிஞ்சிருந்தால் திருந்து பாவக் கணக்கை எழுதாதே அதுதான் உனக்கே உதவாதே மனசிருந்தா வருந்து
கட்டிய கோட்டை வீடு வாசல் யாராலே நித்தமும் ஏழை சிந்தும் வேர்வை நீராலே ஆஹாஅன்றாடம் உன்னோடு மன்றாடும் பாட்டாளி கண்ணீரும் செந்நீரடா
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம் அதை நீ புரிஞ்சிக்கடா டேய்அதை நீ புரிஞ்சிக்கடா
குடிசையில் கூட காத்து வரும் மாளிகை என்றா பாத்து வரும் அதற்கில்லையே பேதம் வல்லான் என்றால் வளைந்திருக்கும் இல்லான் என்றால் நிமிர்ந்திருக்கும் மனிதர்களில் பேதம்
குத்திய வரைக்கும் லாபம் என்றால் குனிவோமா குனிந்தவர் நாங்கள் நிமிர்ந்தால் உன்னை விடுவோமா உண்டான நேரத்தில் கொண்டாட்டம் போடாதே திண்டாட்டம் பின்னால் வரும்
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம் அதை நீ புரிஞ்சிக்கடா டேய்அதை நீ புரிஞ்சிக்கடா பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம் பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம் இந்த சக்தியில்லாம ஏது சுகம்