Adiyamma Rakkayi Azhaga |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க இருட்டுக்கு தோதான நெறமில்லையா காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையாஆஆ
அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க இருட்டுக்கு தோதான நெறமில்லையா காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா
அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க
நடப்பது நடக்கட்டும் இனி கரடியின் கையிலொரு கனி மதியொன்று நினைத்தது விதியொன்று நினைத்தது தாலி வந்தாச்சு தோழி
வைரத்தின் தரம் என்ன தரம் நிலக்கரி அது என்ன நிறம் ஜாதகம் சரியில்லை சாதகம் அதிலில்லை யாரோ யாரோடு யாரோ
அழகான தந்தம்தான் யானைக்கு சொந்தம்தான் அழகான தந்தம்தான் யானைக்கு சொந்தம்தான் அம்மாடி விதியென்ன மாறுமா தீருமா
அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ள ஏ மாப்பிள்ளை கறுப்பன்தான் அழகில்லையா மன்மதன் கறுப்பன்தான் அறிவில்லையா
அடியம்மா ஹேய் அடியம்மா ஹேய் அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ள அடியேய்
கறுப்புக்கு என்னடி கொற உன் கறுமுடி வெளுத்ததும் நரை விதி ஒன்று நினைக்கட்டும் மதியதை ஜெயிக்கட்டும் தாலி பொன்னான வேலி
வைரங்கள் எங்கிருந்து வரும் அடி நிலக்கரிதான் அதை தரும் ஜாதகம் பொய்யடி சரித்திரம் மெய்யடி ஜோடி சேர்ந்தாச்சு போடி
அழகுன்னா ஆபத்து அன்புதான் நம் சொத்து அழகுன்னா ஆபத்து அன்புதான் நம் சொத்து கோழிக்கு எந்நாளும் சேவலே காவலே
அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க ஏய் இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க ஆஹான் இருட்டுக்கு தோதான நெறமில்லையா காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா
அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க இருட்டுக்கு தோதான நெறமில்லையா காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா
அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ளஏ