Aiyo Indru En Vanil |
---|
ஹையோ இன்று என் வானில் ஏதேதோ மாற்றங்கள் ஏன் என்று புரியாமல் விடை தேடும் ஏக்கங்கள்
உயிர் தோழன் என்று நினைத்தேன் உன் மாயம் இன்று அறிந்தேன் இது காதல் என்று உணர்ந்தேன் இன்று வானில் நான் பறந்தேன்
தனி தீவாய் நானும் இருந்தேன் வழி போக்கன் போல நுழைந்தாய் ஒரு போரை என்னில் புரிந்தாய் உன் அடிமை என்கின்றாய்
தாய் கண்ட பிள்ளை போல அழகாய் மனம் சிரிக்கிறதே வழி மறந்து தொலைவது போல் மறு நிமிடம் அழுகிறதே
என் வீணை இன்றேணோ உன்னாலே இசைக்கிறதே என் இதயம் உன் நினைவில் தீயாய் எரிகிறதே
எல்லை இல்லை அழிவும் இல்லை வாழ்ந்திடலாம் காதலா விண்மீன் எல்லாம் நம் பெயர் என்ன எழுதிட வா காதலா
என் வானம் எங்குமே உந்தன் காதல் மேகமே
அன்பை விட இனிமை ஒன்று கிடையாதே காதலா காதல் சொல்ல அளவும் இல்லை திகட்டாதே காதலா
என் பாடல் எங்குமே உந்தன் அன்பின் ராகமே
தாய் கண்ட பிள்ளை போல அழகாய் மனம் சிரிக்கிறதே மடி சாய்ந்த குழந்தை போல் நினைவெல்லாம் இனிக்கிறதே
அடடா இன்று என் வானில் அழகாய் சில மாற்றங்கள் சில்லென்று அனைக்கிறதே காலை பனி மூட்டங்கள்