Amma Thaaye Magamayi

Amma Thaaye Magamayi Song Lyrics In English


அம்மா தாயே மகமாயி அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே அம்மா தாயே மகமாயி அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

மடிப்பிச்சை கேட்டேன் நானே திருமாங்கல்யம் கிடைத்திட தானே பனிவரை தோன்றிய தேனே சிவன் பாதத்தில் உறைகின்ற மானே

அம்மா தாயே மகமாயி அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

மருமகள் அழுதக் குரல் உன் மணிச் செவிக் கேட்காதோ என் திருமகன் உயிர் பிழைக்க உன் அருள் வந்து வாய்க்காதோ

மருமகள் அழுதக் குரல் உன் மணிச் செவிக் கேட்காதோ என் திருமகன் உயிர் பிழைக்க உன் அருள் வந்து வாய்க்காதோ

ஒரு மகன் ஈன்றவள் நானென்றால் அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ ஒரு மகன் ஈன்றவள் நானென்றால் அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ பாசங்கள் தாய்மைக்கு பொதுவென்றால் அடி எனைப் போல் நீயொரு தாயல்லவோ எனைப் போல் நீயொரு தாயல்லவோ

அம்மா தாயே மகமாயி அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

ஆயிரம் கண்ணுடையாள் அடி அனைத்தும் குருடாமோ அதில் ஓரிரு கண் மலர்ந்தால் உன் கருணைக்கு குறைவாமோ

ஆயிரம் கண்ணுடையாள் அடி அனைத்தும் குருடாமோ அதில் ஓரிரு கண் மலர்ந்தால் உன் கருணைக்கு குறைவாமோ

காலனை உதைத்த பாலனை மணந்த கோலமயில் நீயே அன்று எட்டி உதைத்தது மெட்டிகள் அணிந்த உன் பாதந்தான் தாயே

இன்று சூடிய பூவினை வாடவிடாமல் சூலினியே அருள்க நான் பூசிய மஞ்சளை காயவிடாமல் பகவதியே அருள்க


அம்மா தாயே மகமாயி அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

திருவண்ணாமலையினில் உண்ணாமுலையென அமர்ந்த தயாபரியே திருவானைக்காவினில் ஞானச் சுடர் விடும் அகிலாண்டீஸ்வரியே

திருக்குற்றாலம் தனில் குழல் வாய்மொழி என உற்ற பெரும் நிதியே நல்ல கொடுங்கல்லூரில் கொலுவில் அமர்ந்த வடிவே பகவதியே

நாமக்கல்லில் நாமகிரி திருநெல்வேலி தனில் காந்திமதி நாட்டரசன் கோட்டையிலே நீ கண்ணுடைய நாயகி

ஆயிரம் நாமம் படைத்தவளே ஆயிரம் கோயில் புகுந்தவளே ஆயிரம் நாமம் படைத்தவளே ஆயிரம் கோயில் புகுந்தவளே

நாயகன் உயிரைக் காப்பதற்கு நாளும் விரதம் இருந்தவளே நாயகன் உயிரைக் காப்பதற்கு நாளும் விரதம் இருந்தவளே

உதிக்கும் கதிர் உதிக்க தடை விதித்தவளும் பெண்தான் எமன் பறித்த உயிர் வரித்து வினை முடித்தவளும் பெண்தான்

தீயினிடை தவம் புரிந்த நீயும் ஒரு பெண்தான் கொண்ட நாயகனின் நலம் வேண்டும் நானுமொரு பெண்தான்

கண்ணீரை நெய்யாக்கி நெஞ்சத்தை நெருப்பாக்கி குலமாது புரிந்தேனே யாகம் கணவன் பாவங்கள் புரிந்தாலும் சாபங்கள் இருந்தாலும் எனை மீறி தீண்டுமோ நாகம்

நாகத்தின் வடிவான கருமாரியே இங்கு நீ வந்து பொழிவாயோ அருள் மாரியே தாயே உன் திருப்பாதம் சரணாகதி இங்கு நீயின்றி ஏழைக்கு யார்தான் கதி யார்தான் கதி யார்தான் கதி