Amma Un Karunaikku

Amma Un Karunaikku Song Lyrics In English


ஓயாத அருள் மழையே ஒப்பறிய செழுங்கருணை காயாத தவப் புனலே காசினியில் உயிர்க்கெல்லாம் தாயாகி அணைக்கின்ற தளிர்கரமே நின் மேன்மை வாயார இசைப்பதற்கு மொழியுளதோ ஏடுளதோ

அம்மாஅம்மா உன் கருணைக்கு அளவில்லையே அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே

பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே

இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே

சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள் சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள்

யார் அழுதாலும் தாங்காத மனம் கொண்டவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் ஆஆஆஆஆஹ்ஆ


கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன் கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன்

உன் தாம்பூலம் தனை வாங்கி தமிழ் கூறினான் காளமேகத்தை போல் நின்று கவி பாடினான் இருவர் : காளமேகத்தை போல் நின்று கவி பாடினான்

தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை

என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது

இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே