Ammavum Appavum Vellai |
---|
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் அது விரைவினில் சமரசம் ஆகிவிடும்
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு ரோஜாப்பூ நெருப்பினில் விழுந்ததில்லை அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் கதைகளைப் போலே மாறிடுவார் அவர் கனவினில் தானே வாழுகின்றார்
மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை
ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி நாளைக்கு அவர்தான் மேதாவி என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி
மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை