Anbe Chinthamani Inba |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி பொங்கும் தேனாறு நீ நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி பொங்கும் தேனாறு நீ நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
தங்க திருக்கோபுரம் உங்கள் அழகோவியம் கண்கள் புது காவியம் சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்
மாலை நேரம் சோலை காற்று உனை தீண்டுதே வாழைத் தண்டு காலைத் தொட்டு வெள்ளம் தாண்டுதே
விளையாடவே என் மனம் நாடுதே உறவாடவே தினம் தேடுதே
தங்க திருக்கோபுரம் உங்கள் அழகோவியம் கண்கள் புது காவியம் சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்
ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே
உன் கோயிலில் பொன் விளக்காகவா உன் மார்பிலே மயிலாகவா
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்
அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி பொங்கும் தேனாறு நீ நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ