Anbumikka Mappillaikku |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது நான் வணங்கும் தெய்வம் இது
விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து பெண்ணிலே கலந்ததென்று நான் எண்ணுகின்ற நேரம் இது
பெண்ணிலே கலந்ததென்று எண்ணுகின்ற நேரம் இது விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து பெண்ணிலே கலந்ததென்று எண்ணுகின்ற நேரம் இது எண்ணுகின்ற நேரம் இது
தொட்டதெல்லாம் வைரமன்றோ உங்கள் கைராசி கட்டுங்களேன் கையில் என்னை காதல் கதை பேசி
சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில் மந்திரம் போடட்டுமா சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில் மந்திரம் போடட்டுமா பத்தினி தெய்வம் கண்ணகி என்றே காவியம் பாடட்டுமா
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது நான் வணங்கும் தெய்வம் இது
மை வழியும் கண்களிலே இன்ப வெள்ளோட்டம் மங்கையுடன் சங்கமத்தில் இன்று கொண்டாட்டம்
அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை என்னென்று கூறட்டுமா அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை என்னென்று கூறட்டுமா மங்கல மங்கை குங்குமம் கொண்ட நெற்றியைக் காட்டட்டுமா
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது நான் வணங்கும் தெய்வம் இது