Andha Anbulla Annakkili |
---|
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று சிந்தித்தாள்
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
ஒரு பார்வையில் விதை வந்தது மறுப் பார்வையில் மழை வந்தது துளிர் விட்டது நெஞ்சம் பெண் மனம் குளிர்விட்டது கொஞ்சம்
கூந்தலில் பூக்களை ஒளித்தேன் சின்னக் கோபத்தில் காதலை மறைத்தேன் காதலும் வானமும் ஒன்றுதான் அதை கைகளில் மூடிட நினைத்தேன்
ஊமைகள் நாடகத்தில் நானொரு பாத்திரமா நாடகம் முடிந்துவிட்டால் மௌனமும் சாத்தியமா என்று சிந்தித்தேன் நாளை சந்திப்பேன் இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமே உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமே
முத்தக்கலை கற்ப்பிக்கவும் மோகக் கதை ஒப்பிக்கவும் நெஞ்சென்பது இல்லை கண்மணி நேசம் போல் இல்லை
காதலில் நானின்று வீழ்ந்தேன் உந்தன் கண்களில் கண்களை இழந்தேன் பார்வைக்கு ஆறடி இருந்தேன் உன்னை பார்த்ததும் ஓரடி குறைந்தேன்
புன்னகை ஓவியமே போவது நீதியில்லை நீ எனை நீங்கிவிட்டால் வாழ்க்கையில் பாதியில்லை வந்து நில்லம்மா வார்த்தை சொல்லம்மா
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று மன்னித்தாள்
லாலா லல்லல் லா லாலா லல்லல் லா லாலா லல்லல் லா